பொத்துவில் கல்விக்கோட்ட உப வலயத்தில் 66 மாணவர்கள் சித்தி முஸ்லிம் மாணவர்கள் எல்லைப்புள்ளிகளுக்கப்பால் பெற்று சித்தியடைந்துள்ளனர்சென்ற வருடம் 34 பிள்ளைகள் மாத்திரமே சித்தியடைந்துள்ளனர்.
இவ்வருடம் மாணவர்களின் கல்வியில் பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வருடம் மாணவர்களின் கல்வியில் பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
சித்தியடைந்த விபரம் வருமாறு.
அல் இர்பான் மகளிர் கல்லூரி – 15 மாணவிகள்
தாறுல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயம் – 13
முஸ்லிம் மத்திய கல்லூரி – 11
அல் பஹ்ரியா வித்தியாலயம் – 05
அல் இஸ்றாக் வித்தியாலயம் – 04
அல் கலாம் வித்தியாலயம் – 04
மினாறுல் உலூம் வித்தியாலயம் – 04
அல் அக்ஸா வித்தியாலயம் – 03
அல் ஹிதாயா வித்தியாலயம் – 02
கவிவானன் அஸீஸ் வித்தியாலயம் – 01
அல் ஹுதா முஸ்லிம் வித்தியாலயம் – 01
என்ற அடைப்படையில் இம் முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக பொத்துவில் கல்வி அபிவிருத்தி ஒன்றிய இணைச் செயலாளர் அல் ஹாஜ் எ. எம். அப்துல் றசீட் ஜே . பி அவர்கள் பொத்துவில் நெற் இற்கு தெரிவித்தார்.
இப் பெறுபேறுகளின் அடிப்படையில் அல் இர்பான் மகளிர் கல்லூரி முன்னிலையிலும், தாறுல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயம் இரண்டாம் இடத்திலும் ,முஸ்லிம் மத்திய கல்லூரி மூன்றாம் இடத்திலும் காணப்படுகிறது.
சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும், அதிபர்களையும் பாராட்டி கெளரவிக்கும் ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக