கடந்த சில வாரங்களாக பொத்துவில் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் விடயமாக ஏர்டெல் (Airtel) தொலைத் தொடர்பு நிலையத்தின் நிர்மாணத்தைக் குறிப்பிடலாம்.
மக்கள் அதிகமாக குடியிருக்கும் பிரதேசத்தில் இவ் நிர்மாண வேலைகள் இடம்பெறுவதனால் இதனால் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அப் பிரதேச மக்கள் இந் நிர்மாண வேலைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றனர்.
சுமார் மூன்று மாத காலத்திற்கு முதல் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாண வேலைகள் பிரதேச மக்களின் தலையீட்டினால் கடந்த ஒரு மாத காலமாக இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் பிரதேச மக்களுக்கும் பிரதேச சபை மற்றும் குறித்த நிறுவன அதிகாரிகள் அனைவரும் இது தொடர்பான சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர்.
பிரதேச மக்களின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து குறித்த நிறுவனம் தான் அனுமதி பெறுவதற்காக செலுத்திய மற்றும் தன்னுடைய நிர்மாண வேலைகளுக்கு செலவிட்ட பணத்தினை மீளச் செலுத்துமிடத்து தன்னுடைய நிர்மாணப் பணிகளை நிறுத்துவதாக கூறியுள்ளது.
இதுவரை நடந்து முடிந்த பிரதேச சபைத் தேர்தல்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மக்களின் நல்லபிப்பிராயத்தைப் பெற்றிருப்பவர்தான் தற்போதைய பிரதேசபை தவிசாளர்.இவர் இப்பிரச்சனை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதினை மக்கள் இதுவரையில் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
ஒரு கிராமத்தின் தலைமைத்துவத்தைப் பெற்றிருப்பவர்கள் அம் மக்களின் நலன்களில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். அதுவுமில்லாமல் அவர் எடுக்கக் கூடிய தீர்மானங்கள் முற்று முழுதாக மக்களுக்கு சார்பானதாகவும் இருக்க வேண்டும்.
ஆகவே தொலைத் தொடர்பு நிர்மாணிப்பு தொடர்பாக பிரதேச சபை அதற்கு அனுமதியளிப்பதற்கு முதல் அப்பிரதேச மக்களின் கருத்துக்களையும் அறிந்து செயற்பட்டிருக்க வேண்டும்.
தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் இறைவனிடத்தில் தன்னுடைய தலைமைத்துவம் தொடர்பாக அதிகமான வினாக்களுக்குற்படுவார்கள் என்பது முஸ்லிம்களாகிய நாம் அறிந்தது. பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தவறிழைத்தாலும் அது மொத்த பிரதேச சபையும் தவறிழைத்ததாகவே கருதப்படும்.
தொலைத்தொடர்பு நிலையத்தின் நிர்மாண வேலைகள் தொடர்பான விடயம் மக்கள் பிரதேச சபை மீது கொண்ட நம்பிக்கையினை வலுவிழக்கச் செய்துள்ளது.
இது தொடர்பாக கடந்த ( 2012.10.12) வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையின் பிற்பாடு வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்திலும் பிரதேச சபையின் இந்த போக்குத் தொடர்பாக மிகவுக் கவலையாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சென்ற வெள்ளிக்கிழமை (2012.10.19) இவ்விடயம் தொடர்பாக மக்கள் கருத்தெடுப்பு ஒன்றும் இடம்பெற்றது இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது மக்கள் பிரதேச சபை மீதும் தலைவர்கள் மீதும் வெருப்புக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
பிரதேச சபை நிர்மாண வேலைகளுக்கு அனுமதியளிக்கும் போது மக்கள் நடவடிக்கையில்லாத புறம்பான ஒரு இடத்தில் கொடுத்திருந்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காகது ஏன் இதுவரையில் ஐந்துக்கு மேற்பட்ட தொலைத்தொடர்பு நிலையங்கள் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. இதன் போது எந்தப் பிரச்சனையும் எழுந்ததாக தெரியவில்லை. அல்லது எழுப்பப்பட்ட பிரச்சனைகள் மறைக்கப்பட்டுள்ளதா என்பதுவும் தெரியவில்லை.
மக்களுக்காக செயற்பட விரும்பி வந்த தலைவர்கள் மக்களின் நலனில் சிறிதாவது கவணமெடுக்க வேண்டும். இந்தியாவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பிரதேசங்களில் அமைந்திருக்கும் தொலைதொடர்பு நிலையங்களை அகற்றிவிடுமாறு அம்மாநில அரசுகள் கட்டளையிட்டுள்ளன என்பதுவும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒருவிடயம்.
பொருத்திருந்து பார்ப்போம் இது தொடர்பாக பிரதேச சபை என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்றும் அதில் மக்களின் கருத்துக்கள் எவ்வாறு இருக்கின்றது என்றும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக