28.12.11

உயர்தர பரீட்சையில் கோட்டை விட்ட பொத்துவில்

  பொத்துவில் புதல்வன்       28.12.11
அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் பொத்துவில் பிரதேச மாணவர்கள் திருப்திகரமான பெறுபேறுகளை பெறவில்லை.
குறிப்பாக கலைப்பிரிவு மாணவர்கள் பரீட்சையில் பிரகாசிக்க தவறியுள்ளனர்.

கலைப்பிரிவைப் பொருத்தவரையில் அம்பாரை மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் பொத்துவில் பிரதேசம் தான் முதல் நிலைவகித்து வருகின்றது.அந்த வகையில் சென்ற வருடத்தைவிட இவ் வருடம் கலைப்பிரிவு பெறுபேறுகள் மிக மோசமாக அமைந்துள்ளது. அதிகளவான மாணவர்கள் தமிழ் மொழிப் பாடத்தில் S மற்றும் F தரங்களைப் பெற்றுள்ளனர்.

பொத்துவில் மத்திய கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் முதற்தடவையில் தோற்றிய 10 மாணவர்களில் 3 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.இது மத்திய கல்லூரியின் வரலாற்று சாதனையாக இருந்த போதிலும்,கலை,விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவுகளில் மாணவர்களின் பெறுபேறுகள் மிக மோசமாகவே இருக்கின்றது.

கலைப்பிரிவில் சராசரியாக ஒவ்வொருவருடமும் 12 மாணவர்கள் பல்கலைக் கழ்கத்திற்கு தெரிவாவர்.ஆனால் இம்முறை அல் இர்பான் பெண்கள் பாடசாலையை சேர்ந்த 4 மாணவர்கள் மாத்திரமே தெரிவாகியுள்ளனர்.

இவ் திடீர் மாற்றத்திற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் மாணவர்களா ? ஆசிரியர்களா ? அல்லது அரசா ? என பிரதேச மக்கள் மத்தியில் வினாக்கள் எழுந்துள்ளன.

எது எவ்வாறாயினும் இந் நிலை  எதிர்காலத்திலும்  தொடர்ந்து காணப்படுமேயானால் எமதூரின் கல்வி நிலை என்னவாகும்?

தொடர்புடைய அதிகாரிகள்  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
logoblog

Thanks for reading உயர்தர பரீட்சையில் கோட்டை விட்ட பொத்துவில்

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: