பொத்துவில் பிரதேசத்திலிருந்து நேற்று வெடிபெருட்கள் மீட்கப்பட்டுள்ளன.பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவ்லடிப்படையில் இவை மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து தாராம்பளை பிரதேசத்தில் உள்ள சமுளை மரத்தின் பொந்தனுள் பொலித்தீன் பையினால் பாதுகாப்பான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கைக்குண்குள்,சயனையிற் வில்லை ஒன்று ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
இந்த வெடிபொருட்கள் தற்போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பிரதேசம் முன்னர் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக