12.10.11

பாகிஸ்தானிலும் மர்ம மனிதன்

  பொத்துவில் புதல்வன்       12.10.11
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றில் முகமூடி அணிந்த 60 மர்ம நபர்கள் புகுந்து மாணவியர் மற்றும் ஆசிரியைகளை இரும்புக் கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளனர்.
ராவல்பிண்டி நகரில் எம்.சி.மாடல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 400 மாணவியர் படிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இதன் அருகில் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளது.
கடந்த 8ம் திகதி முகமூடி அணிந்த 60க்கும் மேற்பட்டோர் கைகளில் இரும்புக் கம்பிகளுடன் பெண்கள் பள்ளிக்குள் நுழைந்தனர்.
மாணவியரும் ஆசிரியைகளும் ஆடம்பரமாக பொருத்தமில்லாத உடையணிந்து வருவதாக குற்றம்சாட்டிய அவர்கள் அனைவரையும் இரும்புக் கம்பிகளால் அடித்து நொறுக்கினர்.
பின் அடக்க ஒடுக்கமாக ஆடை அணிந்து வர வேண்டும். அனைவரும் தலையில் அணியும் ஹிஜாப் அணிய வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இச்சம்பவம் அருகில் உள்ள ஆண்கள் பள்ளியில் இயங்கி வரும் எம்.சி பள்ளிகள் நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது. எனினும் தாக்கியவர்கள் சிறிது நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தை அடுத்து நகரில் மக்கள் மத்தியில் பீதி பரவியது. இதனால் நேற்று முன்தினம் பள்ளிக்கு வெறும் 40 மாணவியரே வந்திருந்தனர். பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
அனைத்துப் பள்ளி நிர்வாகங்களும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எம்.சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் தங்களால் மாணவியரைக் காக்க இயலாத போது இச்சம்பவங்களை எப்படித் தடுக்க முடியும் என ஆசிரியைகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொலிசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

logoblog

Thanks for reading பாகிஸ்தானிலும் மர்ம மனிதன்

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: