10.10.11

சர்வதேச வர்த்தக கண்காட்சி நிறைவு

  பொத்துவில் புதல்வன்       10.10.11
மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்த சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்றுடன் (9.10.2011)நிறைவு பெற்றது. நேற்றைய இறுதி நாள் வைபவத்தில் அமைச்சர் ராஜித சேனராட்ன,
மற்றும் பிரதியமைச்சர்களான பசீர் சேகுதாவூர், விநாயக மூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண ஆளுனர் அல்மிரட் மொஹான் விஜேவிக்ரம, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,  தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவர் வி.ரஞ்சித மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மூன்றாம் நாள் கண்காட்சி நிகழ்வுகளை இவர்கள் ஆரம்பித்து வைத்ததுடன் கண்காட்சியையும் பார்வையிட்டனர்.தேசிய கைத்தெரிழல் அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தெரிழல் விவசாய சம்மேளனத்தினால் இவ்வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.
logoblog

Thanks for reading சர்வதேச வர்த்தக கண்காட்சி நிறைவு

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: