தவளைகள் கத்தும்!
தேர்தல் வந்தால்...
கொடியும் திடீரென முளைக்கும்!
மறையின் மணிமொழி மறந்தே
மறையின் மணிமொழி மறந்தே
குறைமாதக் குழந்தைகள்
குதிப்பரே துள்ளி!
"நாரே தக்பீர்" தனை - மது
நாற்ற வாய்கள்
ஊரெல்லாம் ஒலிக்குமே!
'தீன்' வழி இதுவோ...
தீர்வுதான் வருமோ?
பாரதூரம் தெரியாத எலிகள்
முஸ்லிம் கட்சியை பல கூறுகளாய்
அரிந்து தள்ளியதே!
கண்ணீரிலும் செந்நீரிலும்...
எம்மவர் வாக்குப்பலத்திலும்...
ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சிலும்...
ஆயுதமில்லா போராளிகளின் -
உண்மைத் தியாகத்திலும்...
மூத்த தலைவன் வகுத்த வழியிலும்...
வளர்த்த கருங்காலி மரத்தினை -
காவாலிகள் பட்டை உரித்து
கொட்ட மடிக்கின்றனரே !
கொள்ள்கை மறந்து - நடக்கின்றாரே !
தலையற்ற சுயநல
வால்களுக்கு...தலைமைத்துவ
சிந்தனையின் செழிப்பு
பழிப்பாக பட்டதோ...!
வௌவால் கூட்டம்௦
வளமாய் பழமுன்னவோ -
எழிலை ஏலவே
மரமொன்றை நட்டானோ...
நமது தலைவன் - முஹம்மது அஷ்ரப்...?
மூத்த தலைவனின் -
மூளையில் உதித்த திட்டங்கள்
நிறம் மாற்றப்பட்டு -
அலிபாபாவின் குகையில் -
மூளையில் முடங்கி கிடக்கிறதே !
மரத்தின் ஆணிவேரில்...
வாய் வைத்து உறுஞ்சியே...
உல்லாசமாய் அவர் வாழ...
ஊதாரிகள் ஜே.பி.யாக...
'கொந்தராத்து' க் கழுகுகள் -
மரத்தின் உச்சியிலே வாழ...
பாமர மக்கள் மட்டும் -
வறுமைக்கோட்டின் கீழே...
வாடித் தொங்குகிறாரே !
மரம் நாட்டிய தலைவன்
மர்ஹூம் முஹம்மது அஷ்ரப்
மரத்தின் உல்லாசக் கொப்பிலே
உக்கார்ந்து உசுப்பி விட்டாரே !
ஒட்டியிருந்த செயற்கை -
இலைக லெல்லாம்...
மட்டிலா மகிழ்விலே -
மயங்கி அசைந்தனவே !
கொட்டுண்டதே...
கொள்ளையாய் பணம்
கோடி...கோடியே தினம் !
கீழிருந்து பழம் பொருக்க...
ஆயிரம் பேர் காத்திருக்க...
'தொரட்டி' கட்டி பழம் பறிக்கவும்
தொண்டராய் திரண்டனரே !
அடிமரத்தையே...
அறுக்க வந்த அரிவாளுக்கு -
பெரிதாய் குஞ்சம் கட்டியே ....
'கும்பிடு' போட்டு -
தம்படி தேடும்...
செப்படி வித்தைக்காரர்
எப்படி எல்லாமோ
குழப்படி செய்து
'கம்பனி' சேர்ந்தனரே !
புழுதி அடங்கினால் தெரியும்
ஏறி வந்தது... எருமை மாட...
கோவேறு கழுதையா என்று !
ஏ எல் ஏ முஹமத் மாஸ்டரின்
நடந்து வந்த பாதையிலே...! (2004)
எனும் கவிதை தொகுப்பிலிருந்து
நடந்து வந்த பாதையிலே...! (2004)
எனும் கவிதை தொகுப்பிலிருந்து

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக