15.10.11

விழிப்பு

  பொத்துவில் புதல்வன்       15.10.11

மூன்றிலிரண்டு பகுதி இரவு கடந்து விட்டது
தூங்கு என் மகவே
எனது உள்ளங்கையில் தலை வைத்துக் கொள்எனது தோல்களில் படுத்துக் கொள்

நான் தூங்கக் கத்திராதே
நான் விழித்திருக்க வேண்டும்
நான் தூங்க முடியாது


நீ படுத்தவுடன் தூங்கிப் போவாய்
இயற்கை கடின முகம் கொண்டது
அதன் மூச்சு கடினமானது


காற்றின் சப்தம்
மரங்களின் இரைச்சல்
மேகங்களின் உறுமல்
மழைத் தூறல்


கடவுளே -
உன்னை எழுப்பிவிடும் என்று நான் பயப்படுகிறேன்
கண்ணே உனது கனவுச் சங்கிலியின்
சின்ன இழைகளை அறுத்துவிடுமென...
தூங்கு என் மகவே
எனது உள்ளங்கையில் தலை வைத்துக் கொள்
எனது தோல்களில் படுத்துக் கொள்
நான் தூங்கக் கத்திராதே


உன்னைப் பாதுகாக்க 
நான் தூங்காதிருக்க வேண்டும்
நான் துங்க முடியாது


2002 ஆம் வருடம் வெளியான
வானம் சஞ்சிகையில்
இடம்பெற்ற அப்துல்லா பௌசு வின் கவிதை 

logoblog

Thanks for reading விழிப்பு

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: