9.10.11

துமிந்த சில்வாவைப் பார்வையிட வைத்தியசாலைக்கு விரைந்தார் கோத்தபாய

  பொத்துவில் புதல்வன்       9.10.11

முல்லேரியா சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில
நிமிடங்களில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அங்கு விரைந்து சென்றார்.

துமிந்தவின் நிலைமை குறித்து கேட்டறிந்து கொண்ட கோத்தபாய, ஆபத்தான நிலையில் இருக்கும் அவரைக் காப்பாற்றித் தருமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார் என்று தெரியவருகின்றது.
இதேவேளை, குறித்த மோதலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்டதை அறிந்து வைத்தியசாலைக்கு விரைந்து வந்த சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் இந்தக் கொலைக்கு மஹிந்த ராஜபக்ச பொறுப்புக் கூற வேண்டும் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், அவருக்குச் சார்பாக அப்போதைய ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கவுடன் பகிரங்கமாக கருத்து வெளியிட்டு மோதிக் கொண்டவர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர என்பது குறிப்பிடத்தக்கது.


logoblog

Thanks for reading துமிந்த சில்வாவைப் பார்வையிட வைத்தியசாலைக்கு விரைந்தார் கோத்தபாய

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: