1.11.11

அனர்த்த நினைவு கூறல் இம்முறை மட்டக்களப்பில்

  பொத்துவில் புதல்வன்       1.11.11
மக்களுக்கு அனர்த்தம் தொடர்பான விழிப்பூட்டல் செய்வதற்காகவும் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தோரை நினைவு கூருவதற்காகவும் தேசிய பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும்
டிசம்பர் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இவ்வாண்டு தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இந்த வைபவத்தில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு தின பிரதான வைபவத்தின் போது முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறவுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் காத்தான்குடியில் இடம்பெறலாமெனவும் தெரியவருகின்றது.
logoblog

Thanks for reading அனர்த்த நினைவு கூறல் இம்முறை மட்டக்களப்பில்

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: