இத்தாலியில் வசித்து வரும் இங்கிலாந்து பெண்மணிக்கு அந்நாட்டு போலீசார் ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் டாலர் அபராதம் விதித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 62 வயது பெண்மணி ஒருவர் இத்தாலியின் டுஷ்கேன் மாகாண தலைநகரான புளோரன்ஸ் பகுதியில் வசித்து வந்தார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 62 வயது பெண்மணி ஒருவர் இத்தாலியின் டுஷ்கேன் மாகாண தலைநகரான புளோரன்ஸ் பகுதியில் வசித்து வந்தார்.
இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பலமுறை போலீஸ் கண்ணில் மண்ணை தூவி அதிவேகமாக சென்று வந்தார். தொடர்ந்து அவரை கண்காணித்து வந்த போலீசார் அவரை பிடிக்க முடியாமல் திணறினர். இதனையடுத்து அந்த பெண்மணி தனது காரை வழக்கமாக நிறுத்தி வைத்திருக்கும் இடத்தில் போலீசார் காத்திருந்தனர். அப்போது தனது காரை எடுப்பதற்காக வந்த போது அப்பெண்மணியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்படுவதற்கு முன்னர் அப்பெண்மணி போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்ட சாலையில் அதிவேகமாக 1,500 தடவை சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து அவர் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட காரை பயன்படுத்தியதற்காகவும், அதிவேகமாக சென்று வந்தததற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி அவர் சுமார் 76 ஆயிரம் பவுண்டுகள் அதாவது 1, 18 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக