5.12.11

மட்டக்களப்பு மரமுந்திரிகை சாகுபடி வீழ்ச்சி

  admin       5.12.11
இலங்கையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் 2010 - 2011ம் ஆண்டுகளில் மர முந்திரிகை சாகுபடியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு ஏறாவுர் மற்றும் கோட்டைக் கல்லாறு பிரதேசங்களில் மரமுந்திரிகை பதனிடல்இ விற்பனையை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

மர முந்திரிகை சாகுபடியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக பதனிடப்பட்ட மரமுந்திரிகைப் பருப்பின் விலையும் தற்போது கிலோ ரூபா 1800 - 2000 வரை உள்ளுர் சந்தையில் விற்பனையாகின்றது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த விலை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இம்மாவட்டங்களில் 2010 -2011ம் ஆண்டுகளில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாகவே மரமுந்திரிகைச் சாகுபடியில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மர முந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய இணைப்பாளர் டேவிட் நிதர்சன் கூறுகின்றார்

இம் மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் மர முந்திரிகைச் செய்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் 20 சத வீதமான நிலப்பரப்பிலேயே செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

வழமையாக வருடாந்தம் 75 தொடக்கம் 90 மெற்றிக் தொன்கள் அளவில் இருந்த மர முந்திரிகைப் பருப்பு உற்பத்திஇ இந்த ஆண்டு 40 மெற்றிக் தொன் ஆக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
logoblog

Thanks for reading மட்டக்களப்பு மரமுந்திரிகை சாகுபடி வீழ்ச்சி

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: