முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் பாராளுமன்றில் கருத்து வெளியிட அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தமது கழுத்துப்பட்டியை கழற்றி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்ப்பை வெளியிட்டார்.சரத் பொன்சேகா தொடர்பில் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றுவதற்கு நேற்று ரணில் விக்ரமசிங்க முயற்சித்தார்.
எனினும் அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ரணில் விக்ரமசிங்க தாம் அணிந்திருந்த பொதுநலவாய இலச்சினை பொறிக்கப்பட்ட கழுத்து பட்டியை கழற்றி எதிர்ப்பை வெளியிட்டு அவையை விட்டு வெளியேறிச் சென்றார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் சரத் பொன்சேகா தொடர்பில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் அவர் தொடர்பில் உரையாற்ற இடமளிக்க முடியாது என்று சபாநாயகர் தெரிவித்தமையை அடுத்தே ரணில் தமது எதிர்ப்பை வெளியிட்டார்.
அத்துடன் பிரதம கொறடாவான தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் செயற்பாடு குறித்து எதிர்ப்பை தெரிவித்தனர்
இலங்கை பொதுநலவாய நாடுகளின் அமைப்பு என்ற வகையில் அதன் கழுத்துப்பட்டியை அணிந்துகொண்டு சுதந்திரமாக கருத்து வெளியிடமுடியாமை கவலைக்குரியது என்று ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக