1.1.12

மது குடிக்க பணத்துக்காக, நான்கு மாத மகனை, விற்ற தந்தை

  பொத்துவில் புதல்வன்       1.1.12
மது குடிக்க பணத்துக்காக, நான்கு மாத மகனை, தந்தையே விற்க முயன்ற போது, போலீசார் குழந்தையை மீட்டனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனபள்ளியை சேர்ந்தவர் பரத்,25; பெயின்டர். இவரின் மனைவி அனுஷா. இவர்களுக்கு, நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது. பெயின்டர் வேலையில் கிடைக்கும் பணத்தை, வீட்டில் கொடுக்காமல் குடித்து விட்டு, பரத் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.

ஆத்திரமடைந்த அனுஷா, குழந்தையுடன் மதனபள்ளியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். மூன்று நாட்களுக்கு முன், மாமியார் வீட்டுக்கு வந்த பரத், தன் மனைவியை தாக்கி விட்டு, குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்து, அனுஷா மனதபள்ளி போலீசில் புகார் செய்தார். மதனபள்ளி காந்தி ரோட்டில் பரத், தன் குழந்தையை புரோக்கர் ஆறுமுகத்திடம் விலை பேசுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்து, அங்கு சென்றனர். போலீசாரைப் பார்த்ததும் குழந்தையை போட்டு விட்டு, இருவரும் தப்பியோடினார். குழந்தையை மீட்டு, அனுஷாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இது குறித்து மதனபள்ளி போலீசார் கூறியதாவது: குடிக்க பணம் தராததால், பரத், 300 ரூபாய்க்கு குழந்தையை விற்க அங்குள்ள புரோக்கர் செண்பகம் என்பவரை அணுகினார். செண்பகம், பரத்தை, ஆறுமுகத்திடம் அழைத்து வந்தார். பின், பேரம் பேசி, 300 ரூபாய் கொடுத்து, குழந்தையை பெறும் போது, போலீசாரை பார்த்ததும் ஓடி விட்டனர்.
மதனபள்ளியில் வசிக்கும் ஆறுமுகத்துக்கு, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில், 100க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் உள்ளனர். ஆறுமுகம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர். கடந்த ஐந்தாண்டுகளாக குழந்தைகளை கடத்தி விற்று வருகிறார். ஆறுமுகத்தையும், குழந்தை கடத்தல் கும்பலையும் பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.
logoblog

Thanks for reading மது குடிக்க பணத்துக்காக, நான்கு மாத மகனை, விற்ற தந்தை

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: