அண்மைக்காலமாக பொத்துவிலில் கடமை புரியும் ஆசிரியர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளவும் தங்களது தகுதிகளைக் கூட்டிக்
கொள்வதற்காகவும் பல பயிற்சி நெறிகளை மேற்கொண்டது மாத்திரமில்லாமல் பல பரீட்சைகளையும் எழுதி அவற்றில் சிறந்த பெற்பேற்றையும் கண்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த சில வருடங்களாக அதிபர் சேவைக்கான பரீட்சைகளை எழுதிய பெரும்பாலன ஆசிரியர்கள் அவற்றில் சித்தியடைந்தும் இருக்கிறார்கள் இது எமதூர் ஆசிரியர்களின் அறிவுத்திறனை வெளியுலகிற்கு எடுத்துக்காட்ட சிறந்ததொரு சந்தர்ப்பமாகவும் அமைந்திருக்கிறது.
ஆனால் தற்போது பொத்துவிலில் இருக்கும் பாடசாலைகளை விட அதிபர்களும் அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது.
அதிபர் சேவையில் சித்தியெய்திய ஒவ்வொருவரும் தங்களுக்கு இந்தயிந்த பாடசாலைகளில்தான் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் இருக்கிறார்கள்.
இவர்கள் இப்படி எதிர்பார்ப்புடன் இருக்க அதிபர் சேவையில் சித்தியெய்திய ஆசிரியர் உதவியதிபராகவும் அதிபர் சேவை பரீட்சை எழுதாதவர் அதிபராகவும் இருக்கின்ற கொடுமையும் இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது
இந்த நிலை தொடர்ந்தால் எமதூரின் எதிர்கால கல்வி நிலைமை...?
ஆகவே தகுதி வாய்த்தவர்களுக்கு உரிய பதவிகளும் பொறுப்புக்களும் கிடைக்க எமதூர் புத்திஜீவிகளும் பொது மக்களும் என்ன முடிவெடுக்கப் போகிறார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக