மனிதனின் சிறப்பு மேலும், ஆதமுடைய மக்களைத் திட்டமாக நாம் கண்ணியப்படுத்தினோம்: கரையிலும், கடலிலும் நாம் அவர்களை சுமந்துசெல்(லும்படிசெய்)கின்றோம்,
நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு நாமே உணவளிக்கின்றோம். நாம் படைத்தவற்றில் அனேகவற்றை விட(தகுதியில்) நாம் அவர்களை மகிமிக மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றோம் (17:70)
நிச்சியமாக நாம் மனிதனை மிக அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம் (95:4)
அவன் எத்தகையவன்னென்றால் பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காக அவன் படைத்தான் (2:29)
அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.(6:165)
ஆறு அறிவு
பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்ந்தறிதல், ருசித்தறிதல், பகுத்தறில் (கேட்டல், கேட்டதை எடுத்துச் சொல்லும் அறிவு ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு அறிந்துக்கொள்ளுதல்)
அவனே அவனுக்கு (அவன் பேசும் மொழியின்) விளக்கத்தை கற்றுக் கொடுத்தான் (55:4)
இத்தனைச் சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ள மனிதன் நேர்வழியில் நடக்கிறானா? இல்லையா?
இல்லை! இந்த அறிவை தவறாகப் பயன்படுத்துகிறான். உதாரணமாக மது அருந்துதல் லாபமா? அல்லது நஷ்டமா?. நஷ்டம்தான் என்று தெரிந்துக் கொண்டே குடிக்கின்றான் பகுத்தறிவு சொல்கிறது கெடுதி என்று, ஆசை (மனோ இச்சை) சொல்கிறது குடி என்று.
சிறந்த மனிதனாக வாழ அறிவு மட்டும் போதுமா?
போதாது, திருடுகின்றான் அது தவறு என்று அறிந்திருந்தும் அறிவைப் பயன்படுத்தி அதை நியாப்படுத்துகின்றான். அறிவைப் பயன் படுத்தி மோசடி (கலப்படம்) செய்கின்றான்.
உதாரணமாக ஹர்ஷத் மேத்தா என்பவன் 3000 கொடி ரூபாய் மோசடி செய்தான் எவ்வாறு செய்தான் தன் அறிவைப் பயன்படுத்திச் செய்தான். இந்த அறிவை நல்வழியில் பயன்படுத்திய நல்லோர்களும் இருக்கின்றார்கள். மனிதன் அறிவைப் பயன்படுத்தி தவறான வழியில் செல்லாமல் இருக்க ஒரு கடிவாளம் தேவை.
தூதர்கள் வருகையின் அவசியம்
கையில் எதையாவது மறைத்து வைத்துக் கொண்டு என்ன? என்று கேட்டால் தெரியாது. ஒருமனிதன் மற்ற மனிதனின் மனதில் உள்ளது என்ன என்பதை அறியமுடியாது ஒரு கணவன் தன் மனைவியின் மனதில், தாய் மகன் மனதில், தந்தை மகன் மனதில் என்ன உள்ளது என்பதை அறியமுடியாது. இப்படி இருக்க படைத்த ரப்புல் ஆலமீன் என்ன நாடுகின்றான் என்பதை எவ்வாறு அறியமுடியும்? அதற்குத்தான் தூதர்கள் தேவை.
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (16:36)
இன்ஷா அல்லாஹ் தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக