26.9.11

இறந்த குழந்தைக்கு வைத்தியம் பொத்துவிலில் சம்பவம்

  பொத்துவில் புதல்வன்       26.9.11
பொத்துவிலில் அண்மைக் காலமாக வைத்தியர்களின் கவனயீனமான   செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பிழையான மருந்து வகைகளை நோயாளிகளுக்கு வழங்குதல் மற்றும்
  நோயாளிகளுடன் ஒழுங்கீனமற்ற முறையில் நடந்து கொள்ளல். போன்றவற்றை உதரணத்துக்கு குறிப்பிடலாம். 
அந்த வகையில் அண்மையில் ஒரு இளம் கர்ப்பிணி தாயின் வயிற்றில் இறந்து போன சிசுவிற்கு பொத்துவிலை சேர்ந்த வைத்தியர் ஒருவர் மூன்று மாதமாக காலமாக தொடர்ந்தும் வைத்தியம் செய்து வந்துள்ளார்.இச் சம்பவம் பொத்துவில் பூராகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது...
குறித்த இளம் தாய் இவ் வைத்தியரிடம் சிசு உருவானதிலிருந்து வைத்திய ஆலோசனை பெற்று வந்திருக்கிறார். வைத்தியரும் பெண்ணை பரீட்சித்து விட்டு சிசு நலமாக இருப்பதாக கூறிவந்துள்ளார். சம்பவ தினம் குறித்த பெண்ணிற்கு வலி அதிகமாகவே பொத்துவில் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கல்முனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றுனுள் சிசு இறந்துள்ளதாகவும்   சிசு இறந்து நீண்ட காலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் இன்னும் ஓரிரு நாட்கள் தாமதமாகி இருக்குமென்றால் தாயும் இறக்க நேரிட்டிருக்கும் என்று கூறியுள்ளனர்.பின் உடனடியாக செயற்பட்ட வைத்தியர்கள் அறுவை சிகிச்சை மூலம் இறந்த சிசு வெளியாக்கி  தாயின் உயிரை  காப்பாற்றியுள்ளனர்.
அண்மையில் மோட்டார் சைக்கிளில் விபத்துக்குளான நபர் ஒருவரிற்கு கால் உடைந்துள்ளது எனக் கூறி காலுக்கு கட்டிட்டு அக்கரைப்பற்று வைத்திய சாலைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அந் நபரிற்கு கல்லில் எந்தவித உடைவும்  இல்லை. இவர்கள் இட்ட கட்டின் மூலம் குறித்த நபர் இன்னும் நடக்கமுடியாமல் அவதிப்படுகிறார்.
ஒரு சில உபகரண  வசதிகளைக் கொண்ட பொத்துவில் வைத்திய சாலையில் 
அவற்றினை இயக்குவதக்கும் ஆள்  இல்லாமல் அவைகளை இவ் வைத்திய சாலை ஊழியர்கள் பளுதாக்கியுள்ளனர் . 


இவ் வைத்திய சாலை தொடர்ந்தும் இவ்வாறான வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் கட்டமைப்பில் இயங்குமானால் பொத்துவில் மக்களின் எதிர்கால நிலை என்னவாகுமோ ??? 


இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ???

logoblog

Thanks for reading இறந்த குழந்தைக்கு வைத்தியம் பொத்துவிலில் சம்பவம்

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: