தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த ஆப்கன் முன்னாள் அதிபர் ரப்பானி தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆப்கன் முன்னாள் அதிபர் ரப்பானி. ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைதி குழுவின் தலைவராக இருந்தார். இவர் தலிபான்களுடன் பேச்சு நடத்தி வந்தார்.
இந்நிலையில் 2 தலிபான் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இங்கிருந்து பெறப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக