அஜித் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவரது படங்களை விட அஜித் பற்றிய கிசுகிசுக்கள் கொலிவுட்டில் அதிகம் பரவி கிடக்கும். அப்படிதான் தற்போது அஜித்தின் அடுத்தபடம் என்ன அது யாருக்கு...? எனும் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படத்தை தமிழ் சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளர் என்று கூறப்படும் ஸ்ரீ சூர்யா மூவிஸ், ஏ.எம்.ரத்னம் என்றும், மற்றொரு பக்கம் இல்லை இல்லை அஜித்தின் அடுத்த படத்தை ஜெயம் ராஜா என்றும், அதற்கான கதைகளம் தெலுங்கில் மகேஸ்பாபு நடித்து வெளிவர இருக்கும் "தூக்குடு" படம் என்று பலவாராக பரவிக்கிடக்கிறது. ஒருவேளை ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், அஜித்தின் அடுத்த படம் அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
விஜய்யை வைத்து குஷி, கில்லி உள்ளிட்ட படங்களை தயாரித்த விஜய்யின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு முன்பு வரை தன் தம்பி ஜெயம் ரவியை மட்டுமே இயக்கி வந்தார்.
தற்போது அஜித்தை வைத்து படம் பண்ணபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிருந்து பெறப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக