22.9.11

கருவைக் கரைத்த கயவர்

  பொத்துவில் புதல்வன்       22.9.11
முஸ்லிம் மனங்களில்
இஸ்லாமிய -
இன உணர்வினை

எளிதாய் விதைத்து -
துவேஷ அரசியலை 
தொழிலாய்  புரிந்து   
எழிலாய் வாழ எண்ணிய -
எங்கள் அரசியல் வாதிகளே !





'முஸ்லிம் மக்களின் -
அபிலாசைகள்' என்ற
வாசகத்தை... முறையாய்
மனனம் செய்து...

மேடைகளிலும் -செய்தி
ஊடகங்களிலும்...
செப்பமாய் சொல்லிதிரிந்து _
எந்த ஆசைகளை வென்றீர் !
சொந்த ஆசைகளைத் தவிர !

அடிமரத்து ஆசாமிகளாய் -
நீங்கள் - அமர்ந்திருக்க...
பெருங்கதிரைகள் -
பெற்றுக்கொடுப்பது -
மட்டும்தானோ - எங்கள்
வாகுகளின் தலைவிதி !

முஸ்லிம் மக்களை
காக்க வந்ததாக...
கோஷம் செய்த - அரசியல்
வேஷதாரிகளே!

பட்டுப் போன -
மரக்கிளைகளாய் -மனம்
விட்டுப்போன மக்கள்
இக்கட்டான  நிலையிலே - நின்று
முண்டங்களாய்...
திண்டாடுவேதோ  இன்று !

மக்களை பலிக்கடாவாக்கி...
மலிவான விலைக்கு  விற்று -
பதவிகளில் நிலைக்கவே...
பறக்கிறாரே முஸ்லிம் எனும் ...
இறக்கையை கட்டியே !

முஸ்லிம் மக்களுக்கு - இன்று
கட்சியே தேவையில்லை
முக்கிய புள்ளிகளுக்கும் - சில
சில்லரைகளுக்குமே - அது
தேவை என்றாகி விட்டதே !

இவைகள்தான் - முஸ்லிம்
மரத்துக்கு நேரே - நாம்
போட்ட புள்ளடிகளின்
உண்மை அர்த்தமோ !

கேட்கும் வரம் -
என்னவென்றே தெரியாது...
இருகரமேந்தி  நிற்கும் -
முஸ்லிம்  சமுதாயமே  !

கட்சிகொள்கையும்
தெரியாது...
காலங்கடத்தும்
கௌரவப் பிரஜைகளே !

கடந்த காலப் பாடங்கள்
எம்மை நோக்க... நாம்
பின் வரிசையில் அமர்ந்து
தூங்கி வழிவதென்ன...
வாய் பிளந்து ?

அடிமைக்குணம் -
அகலாத நிலையிலே...
எமது வாக்குகளின் போக்குகள் -
உதயத்தை  நோக்கி நகரதே !

'தக்பீர்' செய்து -
உண்ண வேண்டியதை...
கதவு இடுக்கிலே வைத்து
கழுத்தை நெரித்து -
உன்னத்தொடங்கிய -
சுயலாபத் தொந்திகளின்
வாய் முழக்கமாய்
வாய்த்ததே 'நாரே தக்பீர்' -இன்று
சாயம் போன மாய மென்ன !

நாங்கள் என்றுமே
அரசியலில்...
அனாதைகள்தான்
அரசியலில் மட்டுமா...?
அனைத்திலும்தான் !

விதியின் வன்முறை -
வலையில் சிக்கிய -நம்
கால்கள் இன்னும்
விடுபடேவேயில்லை !

ஈழத்தின் இனப்பிரச்சினை -
சத்திர சிகிச்சை கூடத்துக்குள்ளே...
சாவா...? வாழ்வா...? என
தவித்துக்கொண்டிருக்க...
தன்னலவாதிகள் -
தனிக்கதிரை  கேட்பதோ ?

சரிபட்டு வருமோ - நமது
சமுதாய நல்லுறவுகள் !

  
ஏ எல் ஏ முஹமத் மாஸ்டரின்
நடந்து வந்த பாதையிலே...! (2004)
எனும் கவிதை தொகுப்பிலிருந்து
logoblog

Thanks for reading கருவைக் கரைத்த கயவர்

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: