அண்மையில் பொத்துவில் பிரதேச சபை ஊழியர்களின் சாதனை மிக்க (கொடும சார் ) ஒரு வேலையினை கண்டு வெந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆமாங்க உண்மையா இது நடந்தது தான்
பிரதேச சபையின் ஊழியர்களில் சிலர் தெரு மின்விளக்குகளை திருத்தும் பணிக்காக பிரதேச சபையினரால் குறுப்பிட ஒரு ஏரியாவிற்கு அனுப்பப்பட்டனர்.
பிரதேச சபையின் ஊழியர்களில் சிலர் தெரு மின்விளக்குகளை திருத்தும் பணிக்காக பிரதேச சபையினரால் குறுப்பிட ஒரு ஏரியாவிற்கு அனுப்பப்பட்டனர்.
இவ் ஊழியர்கள் பழுதடைந்த தெரு மின் விளக்குகளை மாற்றுவதுக்காகவே அனுப்பப்பட்டனர்.ஆனால் இவர்கள் குறித்த மின் கம்பத்திற்கு அருகில் இருக்கும் வீடுகளுக்கு சென்று எரியாத மின் குமிழ்களை மாற்றுவதென்றால் பணம் தரவும் அல்லது மின் குமிழ் வாங்கி தரவும் எனக் கேட்டுள்ளனர்.இதனை ஒரு சில ஏழை அப்பாவி பொது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.பெரும்பாலானோர் ஊழியர்களுக்கு ஏசியுள்ளனர். ஆனால் ஊழியர்களோ மின்குமிழ் தந்தாள் மாத்திரமே நாங்கள் போடுவோம் இல்லாவிட்டால் நாங்கள் செல்கிறோம் என்று கூறி சென்றுள்ளனர். இவர்களின் இச் செயற்பாட்டால் பல தெருக்கள் இன்னும் இருட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றன.
இவர்கள் இவ்வாறு செய்வதற்கு பிரதேச சபையின் நிதிப் பற்றக்குறையோ... அல்லது ஊழியர்களுக்கு அறிவுருத்தப்படதோ...தெரியாது. எவ்வாறாயினும்
நெருப்பில்லாமல் புகை வராது என்பது போல இவர்களுக்குள் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கிறதோ???
அவ்வாறு இருந்தாலும் பொது வேலையில் ஏன் இவ்வளவு அலட்சியம்???
இலங்கையில் உள்ள பெரும்பாலான பிரதேச சபைகள் இலாபம் இல்லாமல் இயங்கவே இல்லை.
அவ்வாறு இலாபம் இல்லாமல் இருந்தால் கூட தேர்தல் காலங்களில் ஒரு சில போலி அரசியல் வாதிகளால் வழங்கப்பட்ட தெரு விளக்குகள் இன்னும் எமதூர் அரசியல் வாதிகளின் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனவே அவைகளையாவது பொது வேலைக்கு பயன்படுத்தினால் என்ன ??
இது தான் எதிர்கால பிரதேச சபையா ??? இவர்கள் தான் எதிர்கால அரசியல் வாதிகளா ??
இணைய தளம் மூலம் இதனை பார்க்கும் பொத்துவில் நண்பர்களே...நீங்கள் இதற்காக எடுக்கும் நடவடிக்கைதான் என்ன??
முடிந்தால் எம்மக்களுக்கு இதனை தெளிவு படுத்துங்கள்

1 கருத்து:
Thank you very much for your commands
And complain
Please tell as the which rood in Pottuvil and the area
Insaallah next time it will not Happening like this
Thank you
கருத்துரையிடுக