27.10.11

கடாபி அகப்பட்டது எப்படி?

  பொத்துவில் புதல்வன்       27.10.11
கடாபியின் பிறப்பிடமான சிர்த் நகருக்குள் சல்லடைத் தேடுதல் நடத்திய கிளர்ச்சிப் படையினர் கடாபியும் சகாக்களும் பதுங்கியிருந்த இடத்தை எவ்வாறு அடையாளம் கண்டனரென சர்வதேச ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
கிளர்ச்சிப் படையினர் முன்னேறிக்கொண்டிருந்த போது அரசாங்கப் படையினர் கடுமையான எதிர்த் தாக்குதல்களை நடத்தினர்.
கிளர்ச்சிப் படையினர் சற்றும் எதிர்பாராத தாக்குதலாக இது இருந்ததால் முக்கிய தலைகள் இங்கு பதுங்கி இருக்கலாமென சந்தேகம் எழுந்தது.
அதேநேரம் கடாபியும் இங்கு பதுங்கி இருக்கலாமென சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் 5 கார்களில் கடாபியும் அவரது ஆதரவுப் படைகளும் தப்பியோடினர். இதனையறிந்த கிளர்ச்சிப் படையினர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்கு புரட்சிப் படையினர் தகவல் தரவே அமெரிக்க போர் விமானங்கள் விரைந்து வந்து அந்த கார்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
இதில் கடாபியின் ஆதரவுப் படையினர்- உளவுப் பிரிவுத் தலைவர்- மகன் ஆகியோர் பலியாகிவிட கடாபி படுகாயத்துடன் தப்பி அருகே இருந்த பாதாள சாக்கடைக் குழிக்குள் இறங்கி பதுங்கினார்.
இதையடுத்து புரட்சிப் படையினர் கடாபியை வெளியே இழுத்துப் போட்டனர். அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தும் சரமாரியாக அடித்தும் இழுத்து வந்து கால்களில் சுட்டனர்.
பின்னர் வயிற்றிலும் சுட்டுவிட்டு கடுமையாக மிதித்தனர்.
அப்போது தன்னை விட்டுவிடுமாறு கடாபி கெஞ்சியுள்ளார். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் புரட்சிப் படையினர் கடாபியை தலையில் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
logoblog

Thanks for reading கடாபி அகப்பட்டது எப்படி?

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: