2.12.11

காருக்கு வாடகை தரவில்லை: நடிகை புவனேஸ்வரி மீது புகார்

  பொத்துவில் புதல்வன்       2.12.11

ரூ 9 லட்சம் மதிப்புள்ள காரை வாடகைக்கு எடுத்துவிட்டு, வாடகையும் தராமல், காரையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக நடிகை புவனேஸ்வரி மீது புகார் கூறப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரைச்
சேர்ந்தவர் அசோக்குமார் . பைனாசியரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை புவனேஸ்வரி மீது மோசடி புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள தனது சொகுசு காரை மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகைக்கு எடுத்து புவனேஸ்வரி பயன்படுத்தி வந்ததாகவும், முதல் மாதம் மட்டும் வாடகை கொடுத்து விட்டு அதன் பிறகு 10 மாதங்களாக வாடகை பணம் தராமல் காரை திருப்பி ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாக அதில் கூறியுள்ளார்.காரை திருப்பி தருமாறு கேட்டதற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் அசோக்குமார் கூறியிருந்தார்.   இந்த புகார் மனு தியாகராய நகர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், நடிகை புவனேஸ்வரியை விசாரிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும் விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தனர். 
logoblog

Thanks for reading காருக்கு வாடகை தரவில்லை: நடிகை புவனேஸ்வரி மீது புகார்

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: