நேட்டோ படைகளின் தாக்குதலால் 24 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியாக எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்ஃபாக் பர்வீஸ் கயானி தெரிவித்தார்.சனிக்கிழமை நேட்டோ படைகள் பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஏவுகணை தாக்குதலுக்கு சிஐஏ பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் ஷாம்ஸி விமானதளத்தை உடனடியாக காலி செய்யுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில் இனிமேலும் இதுபோன்ற தாக்குதலை நடத்தினால் திருப்பித் தாக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக கயானி கூறினார். மேலும் பாகிஸ்தான் விமானப்படையும் இந்தத் தாக்குதலில் இணைந்தால் விளைவு பயங்கரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக