ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் மேலெழுந்தவாரியாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் எதிர்பார்க்கும் பலனைத் தராது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கானஇந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் 5 நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 1945-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை மேலும் விரிவுபடுத்தி, அதன் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்பதே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கோரிக்கையாக உள்ளது.மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பாதுகாப்புக் கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்புக் கவுன்சில் உருவாக்கப்பட்டபோது ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகளும் செயல்பாடுகளும் நவீன காலத்துக்கு ஒத்துவருபவையாக இல்லை.பாதுகாப்புக் கவுன்சிலின் பல்வேறு முடிவுகள் இப்போது ஏற்புடையதாக இல்லை என்பதை இதில் அங்கம் வகிக்கும் நிரந்தர உறுப்பு நாடுகள் தீவிரமாக ஆராய வேண்டும். அதேபோல சர்வதேச சமுதாயத்திடம் இந்த அமைப்புக்கு ஏன் எதிர்பார்த்த அளவுக்கு மரியாதையும், நம்பிக்கையும் ஏற்படவில்லை என்பதைப் பரிசீலிக்க வேண்டிய தருணமிது.மாறிவரும் சூழலுக்கு ஏற்ப குழுலில் மாறறம் கொண்டு வர வேண்டும் என்பதை நிரந்தர உறுப்பு நாடுகள் உணர்ந்து அதைக் களைய ஒட்டுமொத்தமாக ஒருமனதான தீர்மானம் கொண்டு வர முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலின் 15 உறுப்பினர்களுடனான மனந்திறந்த கலந்துரையாடலில் இக்கருத்துகளை ஹர்தீப் சிங் பூரி வெளிப்படுத்தியுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் குறித்து நம்பகத் தன்மை ஏற்படுத்தப்படவேண்டும். அதேபோல அதன் செயல்பாடுகளில் முன்னேற்றம் எட்டப்பட வேண்டும். சிறப்பான செயல்பாடுகள் மூலம்தான் உறுதியான நம்பகத்தன்மையை தொடர்ச்சியாக ஏற்படுத்த முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலின் செயல்பாடுகளில் இப்போது மாற்றம் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமாகும். மேலெழுந்தவாரியாக மேற்கொள்ளப்படும் மாற்றம், அணுகுமுறை ஆகியன எதிர்பார்க்கும் பலனை அளிக்காது என்றார்.புவி அரசியல் யதார்த்த நிகழ்வுகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. வளரும் நாடுகளின் பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.பெரும்பாலான உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் திகழும் போது சர்வதேச அளவில் சமாதானம், அமைதியை நிலை நாட்டுவதில் உள்ள பொறுப்புணர்வும் இந்தியாவுக்கு அதிகரிக்கும்.ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள் மேலும் சிறக்க இந்தியா சில கருத்துகளை அளித்துள்ளது. இதைப் பின்பற்றினால் செயல்பாடு மேம்படும்,வெளிப்படையானதாக அமையும்.ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள் தொடர்பான ஆவணங்கள், தகவல்கள் எதுவும் இந்தியா உள்ளிட்ட நிரந்தர உறுப்பினரல்லாத நாடுகளுக்கு அளிக்கப்படுவதில்லை. நிரந்தர உறுப்பு நாடுகள் எடுக்கும் தீர்மானம் குறித்த விவரம் பிற உறுப்பினரல்லாத நாடுகளும் அறிந்து கொள்ளும் வகையில் வழி செய்யப்பட வேண்டும். ஆனால் தகவல்கள் பிற நாடுகளுக்கு தரப்படுவதில்லை.பாதுகாப்பு சபை தனது விதிமுறைகளை உரிய நேரத்தில் அமல்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலுக்கு ராணுவம், போலீஸ் உள்ளிட்ட வீரர்களை அளிக்கும் நாடுகளிடம் கவுன்சில் எடுக்கும் நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். படைகளின் செயல்பாடு உரிய கால இடைவெளியில் ஆய்வு செய்யப்பட வேண்டும். அமைதிப் பணியிலிருந்து படைகள் திரும்பப் பெறுவது உள்ளிட்ட விஷயங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.பாதுகாப்புக் கவுன்சிலுக்குள்ள பொறுப்பு, கடமைகளை நன்கு உணர்ந்திருக்க வேண்டும். சர்வதேச பாதுகாப்பு, அமைதி உள்ளிட்ட விஷயங்களில் ஐக்கிய நாடுகள் சபை வகுத்தளித்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதைவிடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்வதாக பாதுகாப்பு கவுன்சிலின் நடவடிக்கைகள் இருந்துவிடக்கூடாது என்றும் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக