13.12.11

எங்கே சொல்வது இந்த சீரழிவை ???

  பொத்துவில் புதல்வன்       13.12.11
நீண்ட காலமாக எமது பிரதேசத்தில் நிலவிக் கொண்டிருக்கும் ஒரு குறைபாடாக பெண் வைத்தியர்கள் இல்லாததை கூறலாம்.
குறிப்பாக பெண் மகப்பேற்று வைத்தியர்கள் இல்லாததை குறிப்பிடலாம்.

எமது பிரதேச கர்ப்பிணிகளும் ஏனைய பெண்களும் தங்களுடைய வியாதிகளுக்கு வைத்திய ஆலோசனை பெறுவதற்காகவும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுவதற்காகவும் எமதூரில் கடமைபுரியும் ஆண் வைத்தியர்களிடமும் வெளியூரில் இருக்கும் வைத்தியர்களிடமும் செல்கின்றனர்.

இதன் போது நோயாளிப் பெண்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளகின்ரனர். குறிப்பாக கர்ப்பிணிகள் வெளியூரிற்கு முச்சக்கர வண்டிகளில் செல்வதற்கு பெரும் தொகைப் பணங்களை செலவிடுகின்றனர்.பொருளாதார வசதிகுறைந்த குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிப்பெண்கள்  பஸ்களில் பிரயாணம் செய்யும் போது பலவிதமான கஷ்டங்களுக்குள்ளாகின்றனர்.

பலவித பிரயாண கஷ்டங்களுக்கு முகம்கொடுத்து வெளியூர் செல்லும் அவர்கள் அங்குள்ள வைத்தியர்களினாலும் உரிய முறையில் கவனிக்கப்படுவதில்லை என்பது கவலைக்குறிய விடயமாகும்
அங்குள்ள வைத்தியர்களின் உதவியாளர்கள் மற்றும் வைத்தியசாலை சிற்றூளியர்களின் கெட்ட வார்த்தைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இவற்றின் காரணமாக ஒரு சில  பெண்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க எமதூரில் உள்ள பெண் வைத்தியர்களை ஒரு சில தீய சக்திகள் அவர்களின் சுய இலாபத்திற்காக இடமாற்றம் செய்துள்ளனர்.

ஏன் எமதூரில் மட்டும் இப்படி குள்ளமனம் கொண்டவர்களின் தொகை அதிகமாக காணப்படுகிறது? என்பது புரியாமல் இருக்கின்றது. ஒரு வேளை முன்னோர்கள் இட்ட சாபமோ தெரியவில்லை?

எமதூர் பெண்களின் மானங்களை காப்பதற்காக ஊரில் உள்ள அரசியல் வாதிகள் இது தொடர்பாக என்ன முயற்சி செய்வார்களோ ?

ஆனால் நாங்கள் ஒன்றுமட்டும் இந்த அரசியல் வாதிகளிடமும் ஊரில் உள்ள முக்கிய புள்ளிகளிடமும் கேட்டுக் கொள்கிறோம். இந்த நிலை எதிர்காலத்திலும் தொடராமல் இருக்க இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் இந்நிலை வெகு சீக்கிரத்தில் உங்களின் குடும்பத்திலும் ஏற்படும்.
logoblog

Thanks for reading எங்கே சொல்வது இந்த சீரழிவை ???

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: