13.12.11

இஸ்லாமிய கிளர்ச்சிகள் சியோனிஸவாதிகளின் சதியாகும். அமைச்சர் ஹக்கீம்

  பொத்துவில் புதல்வன்       13.12.11
“இஸ்லாமிய உலகில் தொடர்ச்சியாக நிகழும் மக்கள் கிளர்ச்சிகள், போராட்டங்கள் சியோனிஸவாதிகளின் திட்டமிட்ட சதியாகும்.
இன்று இராணுவரீதியாக பலமுள்ள இஸ்லாமிய நாடுகளே மேற்குலகத்தினால் இத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன’ என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரன் முத்து ஹோட்டலில், முஸ்லிம் சமய, கலாசார, பண்பாட்டலுவலகத் திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி தலைமையில் நடைபெற்ற மௌலவி எஸ்.எச். ஆதம் பாவா (மதனி) எழுதிய “நான்கு கலீபாக்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்..



அமைச்சர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், இஸ்லாமிய உலகில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் நடந்துமுடிந்த கிளர்ச்சிகள் உண்மையில் மக்கள் எழுச்சிகளா?


இன்றேல் சதிமுயற்சிகளா என்று நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த உண்மைகளை எம்மால் அறிந்துகொள்ள முடியும். நிச்சயம் வரலாறுகள் நூலாசிரியர்களினால் எழுதப்படும்.

இதேவேளை, சமகால இஸ்லாமிய உலகின் எழுச்சிகள் விடயத்தில் எங்களது ஊடகங்கள் நடுநிலைமையை இழந்துவிடுகின்றமையை நாம் அறிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கான ஊடகமான அல்-ஜெஸீரா தொலைக்காட்சி கூட தனது நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

அன்று அமெக்கா ஈராக்குக்கு எதிராக யுத்தம் செய்தபோது நாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோம். சதாம் ஹூசைன் எமக்கு ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கூறவில்லை. நாம் அன்று சதாம் ஹூசைனின் அரசியல் கோட்பாடுகளுக்காக ஆதரவு தெரிவிக்க வில்லை. ஒரு இஸ்லாமிய நாடு ஆக்கிரமிக்கப்படுகிறது என்றே ஆர்ப்பாட்டம் செய்தோம். ஆனால், லிபிய தலைவன் விடயத்தில் எமது நாட்டில் பெரிதாக எதுவும் இடம்பெறவில்லை. இவைகள் தான் எமது சமகால வரலாறுகள். என்று தெரிவித்தார்

logoblog

Thanks for reading இஸ்லாமிய கிளர்ச்சிகள் சியோனிஸவாதிகளின் சதியாகும். அமைச்சர் ஹக்கீம்

Previous
« Prev Post

கருத்துகள் இல்லை: