கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் அடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக பொத்துவில் அக்கரைப்பற்று கல்முனை போன்ற பிரதேசங்களில் இரவு வேளையில் மழை பொய்கின்றது. இதனால் பல வீதிகள் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளன.
வழமை போன்று ஒக்டோபர் மாதத்தில் தொடங்கி ஜனவரி மாதம் வரையிலும் இந்த நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும் கடந்த வாரம் பொத்துவில் விவசாயிகள் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் பொத்துவில் வானிலை அவதான நிலையப் பொருப்பதிகாரி ஒக்டோபர் மாதத்தில் மழைபெய்யக் கூடிய சாத்தியமில்லை அதனால் விவசாயிகள் இந்த மாதத்தில் உழவு நடவடிக்கைகளை ஆரபிக்க வேண்டாம் என்று கூறிமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக